2 மாவட்டங்களுக்கு இன்று முதல் 9 நாட்கள் விடுமுறை
2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று முதல் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்திற்கும், மற்றும் உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்தையொட்டி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஜன.13ஆம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஜன.11ஆம் தேதி சனிக்கிழமை முதல் 19ஆம் தேதி வரை தொடர்ந்து விடுமுறை வருகிறது.