Posts

அஞ்சல் ஆயுள் காப்பீடு (PLI) புதிய பாலிசிகள் தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு!

Image
💼 *வரும் 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு PAY RECOVERY MODE (அதாவது சம்பளத்தில் பிடித்தம் செய்து கட்டும் வசதி) அஞ்சல் ஊழியர்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. 💼*எனவே 01.04.2026 முதல் துவங்கப்படும் புதிய PLI பாலிசிகளுக்கு அஞ்சல் ஊழியர்கள் தவிர்த்து மற்ற ஊழியர்களுக்கு PAY RECOVERY MODE பாலிசிகளை துவங்க வேண்டாம். 💼 *இதற்கு பதிலாக அஞ்சல் சேமிப்பு கணக்கு, IPPB கணக்கு, இதர வங்கி கணக்குகளில் இருந்தும் ஆட்டோ பேமென்ட் செய்யும் நடைமுறையை வாடிக்கையாளருக்கு தெளிவுபடுத்தவும். 💼 *மேலும் காப்பீடாளர் தங்களின் PLI பாலிசி Login மூலமாகவும் பிரீமியம் செலுத்தும் வசதியும் உள்ளது. 💼 *ஏற்கனவே பிடித்தம் செய்த பாலிசிகளுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நடைமுறை தொடர்கிறது.

போர்டிங் ஸ்டேஷனில் ஏறாவிட்டால் இனி டிக்கெட் ரத்தாகும்ரயில்வே புதிய விதிமுறை அமலுக்கு வந்தது

Image
பயணி தனது டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள போர்டிங் ஸ்டேஷனில் இருந்து ரயிலில் ஏறத் தவறினால், அவரது இருக்கை உடனடியாக காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு ஒதுக்கப்படும் முறை ரயில்வேயில் அமலுக்கு வந்துள்ளது. ரயில் பயணிகளின் வசதிக்காகவும், காலியாக உள்ள இருக்கைகளை உடனுக்குடன் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கவும் இந்திய ரயில்வே அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, முன்பதிவு செய்த பயணி தனது டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தொடக்க நிலையத்தில் ரயிலில் ஏறத் தவறினால், அந்த டிக்கெட் தானாகவே ரத்து செய்யப்பட்டு, இருக்கை வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும். பழைய விதிமுறை vs புதிய விதிமுறை:  * முன்பு: ஒரு பயணி வராத பட்சத்தில் அடுத்த இரண்டு ரயில் நிலையங்கள் அல்லது ஒரு மணி நேரம் வரை டிக்கெட் பரிசோதகர் காத்திருக்க வேண்டியிருந்தது.  * தற்போது: அனைத்து ரயில்களிலும் ஹேண்ட் ஹெல்டு டெர்மினல் (HHT) எனப்படும் கையடக்க கணினி கருவிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், பயணி வரவில்லை என்பதை டிடிஇ (TTE) உடனடியாக திட்டத்தில் பதிவேற்றுவார். இதனால் அந்த...

முதுமையில் தனித்து விடப்படாமல்,எவருக்கும் பாரமாக இல்லாமல் இருக்க, இப்போதே இதைப் புரிந்து கொள்ளுங்கள்

Image
முதுமையில் தனித்து விடப்படாமல்,எவருக்கும் பாரமாக இல்லாமல் இருக்க,  இப்போதே இதைப் புரிந்து கொள்ளுங்கள்  01. நிலத் தகராறுகளில் தலையிடாதீர்கள்!பக்கத்து வீட்டுக்காரனுக்கு பாடம் புகட்டுகிறேன் என்று நீதிமன்ற வாசல்களில் தவம் கிடக்காதீர்கள். வழக்கு முடிவதற்குள், நீங்கள் மண்ணுக்குள் போயிருக்கலாம். நீங்கள் போராடி வென்ற நிலத்தில்,நீங்கள் அல்ல, வழக்கறிஞர்களே குடியேறுவார்கள்! 🫥🚗 02. பழைய வாகனங்கள் என்னும் சுமை: ஐந்து லட்சம் லாபம் என்று கருதி "செகண்ட் ஹேண்ட்" வாகனங்களை வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். சாலையில் ஓடுவதை விட அது கராஜில் இருக்கும் நேரம் அதிகமானால், நெஞ்சுவலி வாகனத்திற்கு அல்ல, உங்களுக்குத்தான் வரும். 🫥🏠 03. சொத்துக்களை எழுதி வைக்க அவசரப்படாதீர்கள்: பிள்ளைகள் இப்போது "தெய்வங்கள்" போலத் தெரிந்தாலும், கடைசி சதம் வரை சொத்துக்களை எழுதித் தந்த பிறகு, அந்த வீட்டிலேயே நீங்கள் ஒரு "தேவையற்ற பொருளாக" மாறக்கூடும். பிள்ளைகள் கெட்டவர்கள் அல்ல, ஆனால் உலகம் கொடூரமானது. எதையும் கையில் வைத்துக்கொண்டே உயிர் விடுங்கள். 🫥💰 04. கடைசி சேமிப்பை பாதுகாத்துக் கொள்ளுங்...

பிழைக்க தெரியணும். சிரியுங்கள்! சிந்தியுங்கள்!

Image
பிழைக்க தெரியணும். சிரியுங்கள்! சிந்தியுங்கள்! அதிலும் சாமர்த்தியமாக பிழைக்க தெரியணும்.. ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறி சென்று விட்டது. அப்பொழுது, அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதை பார்த்த நாய், ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு, எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந...

பிழைக்க தெரியணும். சிரியுங்கள்! சிந்தியுங்கள்!

Image
பிழைக்க தெரியணும். சிரியுங்கள்! சிந்தியுங்கள்! அதிலும் சாமர்த்தியமாக பிழைக்க தெரியணும்.. ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறி சென்று விட்டது. அப்பொழுது, அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதை பார்த்த நாய், ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு, எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந...

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு*

Image
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 16, 17-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும் (ஜூலை 14), நாளையும் ஓரிரு இடங்களிலும், 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களிலும், வரும் 16, 17-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18, 19-ம் தேதிகளில் நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட 7 டிக...

PIN குறியீட்டிற்கு விடை கொடுங்கள்

Image
  அஞ்சல் முகவரிகளின் ஈர்ப்பாக இருந்த PIN குறியீடுகளின் சகாப்தம் முடிந்துவிட்டது, அதற்கு மாற்றாக இந்திய அஞ்சல் துறை 'DigiPIN' என்ற டிஜிட்டல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இனிமேல் நாட்டில் DIGIPIN புதிய முகவரி அமைப்பாக இருக்கும். பாரம்பரிய PIN குறியீடுகள் பரந்த பகுதியை உள்ளடக்கியிருந்தாலும், 10 இலக்க DigiPIN அமைப்பு உங்கள் வீடு அல்லது வணிகத்தின் சரியான இருப்பிடத்தைக் குறிக்கிறது.  அதாவது, உங்கள் வீடு அல்லது வணிகத்தின் சரியான இருப்பிடத்தை இந்த DigiPIN மூலம் காணலாம். DigiPIN ஐ உருவாக்கி குறியீட்டைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட அரசாங்க வலைத்தளத்தைப் பார்வையிட்டு உங்கள் வீட்டைக் கண்டறியலாம். DigiPIN இன் நன்மை என்னவென்றால்,  அது சரியான இடத்திற்கு கடிதங்களை வழங்கும் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்புத் துறைகள் போன்ற அவசர சேவைகள் இருப்பிடத்தைப் புரிந்துகொள்வதன் மூலம் அதை துல்லியமாக அடைய உதவும். கிராமப்புறங்கள் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் DigiPIN பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. கடிதப் பரிமாற்றத்திற்கு மட்டுமல்ல, மின் வணிக வலைத்தளங்களுக்கும் DigiPIN சரியா...